மிரட்டும் இந்தியா மொபைல் நிறுவனம், அதிரடியான Features

மிரட்டும் இந்தியா மொபைல் நிறுவனம், அதிரடியான Features

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி, முதன்முறையாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் பிரத்தேயேகமாக ரூ.9,999/- என்ற விலைக்கு இன்று முதல் இக்கருவி விற்பனையை தொடங்கியுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி அகற்றக்கூடிய மெக்கானிக்கல் ப்ரேம் பின்புறம் கொண்டுள்ளது மற்றும் முன்பக்கம் ஒரு 5.7 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டு நிரம்பியுள்ளது. மற்ற எச்டி திரைத் தீர்மானங்களைப் போலன்றி, இது 1440 x 720 பிக்சல்கள் கொண்டது மற்றும் 18: 9 என்ற ஒரு திரை விகிதம் கொண்டுள்ளது.


மெமரி
3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் பழைய குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு
பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த சாதனத்தின் மென்பொருள் பக்கத்தை பொறுத்தமட்டில், கேன்வாஸ் இன்பினிட்டி ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த யூஐ கொண்டு இயங்குகிறது.

ஸ்மார்ட் அம்சங்கள்
இந்த மைக்ரோமேக்ஸ் சாதனம் சில ஸ்மார்ட் அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அதாவது, ஸ்க்ரீனை டபுள் டாப் செய்ய ஸ்க்ரீன் லாக் ஆகும், ஸ்மார்ட்போனை பிலிப் செய்வதின் மூலம் ம்யூட் அல்லது அலாரத்தை ஸ்னூஸ் செய்யலாம், குறிப்பிட்ட எண்ணிற்கு அழைப்பை மேற்கொள்ள கருவியை காதின் அருகே கொண்டு செல்லலாம் மற்றும் பல.

கேமரா
ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் கிடைக்குமென்ற நிறுவனத்தின் உறுதியை பெற்றுள்ள இக்கருவியின் கேமராத்துறையை பொறுத்தமட்டில் எப்/2.0, 1.12-மைக்ரான் பிக்சல் அளவு, ஒரு 81.5 டிகிரி லென்ஸ், 5பி லென்ஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புக்களுக்கான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி
பேட்டரித்திறனை பொறுத்தமட்டில், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி ஒரு 2900எம்ஏஎச் கொண்டுள்ளது. சந்தையில் தற்போது இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடுகையில் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளதென்பது வெளிப்படை.
இணைப்பு ஆதரவு
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், இரட்டை சிம், மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்களை வழங்குகிறது. உடன் கிராவிட்டி, ப்ராக்ஸிமிட்டி, லைட், அக்செலரோமீட்டர் மற்றும் மேக்னட்டிக் ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.


Mobile Specifications

Comments

Popular posts from this blog

வாட்ஸ்அப் customize

ஃபேஸ்புக், டுவிட்டரைப் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிபைடு’ குறியீடு