ஃபேஸ்புக், டுவிட்டரைப் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிபைடு’ குறியீடு

ஃபேஸ்புக், டுவிட்டரைப் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிபைடு’ குறியீடு



WHATSAPP

ஃபேஸ்புக் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிபைடு’ குறியீடு வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஏராளாமான போலி கணக்குகள் உள்ளன. இதனால், பிரபலங்களின் பெயர் கெடுவதோடு, அவர்கள் பெயரில் வெளிவரும் கருத்துகளும் உண்மை என்று அவர்களை பின்தொடரும் மக்கள் புரிந்துகொள்கின்றனர்.
இதனால் ஃபேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள், அந்த பக்கத்தின், நம்பகத்தன்மை வாய்ந்தது தான் என்பதை தெரிவிக்கும் வகையில், நீல நிறத்தில் ‘வெரிபைடு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், தற்போது அதேப் போன்று வாட்ஸ்அப்பிலும் பச்சை நிறத்தில் ‘வெரிபைடு’ வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் மொபைல் நம்பர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப்பில் பெயருக்கு அடுத்ததாக இந்த குறியீடு இருந்தால், அந்த நம்பரை வாட்ஸ்அப் நிர்வாகம் அங்கீகாரம் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

Comments

Popular posts from this blog

வாட்ஸ்அப் customize

மிரட்டும் இந்தியா மொபைல் நிறுவனம், அதிரடியான Features